வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை தான் எப்போதும்
செல்வம் சேர்ந்தாலும் அலட்டிக் கொண்டதில்லை ஒருபோதும்
இரண்டாம் வகுப்பில் தான் ரயில் பயணம்
இரவு பகல் பாராமல் உழைத்துப் பெற்ற செல்வத்தில் என்றும் கவனம்
ஆறு பிள்ளைகள் மணம் முடித்துக் கொடுத்தவராம்
அறுபது அகவையிலும் நிறுவனத்தைத் திடமாக நடத்தியவராம்
சிறு வயதில் தந்தையை இழந்த போதும்
சீர்மிகு திறத்தோடு நிர்வாகம் செய்தவராம்
தாய் தந்த தைரியமே மூலதனமாய்க் கொண்டு
தன் முயற்சியால் உலகத்தினை வென்று
ஆக்கத்திற்கு அழுத்தமாகக் காண்பித்தீர்கள் சான்று
ஊக்கமாகப் பின்பற்றுகிறோம் பேரன் பேத்தியர் இன்று
அருள் ஆசிகள் வேண்டி வணங்குகிறோம்
28.11.2019