ஆழமான குரலில் பாடும் அரும்பு
அழகாய்ச் சிரிக்கும் கட்டிக் கரும்பு
தன் கையாலே உண்ணும் கெட்டிச் சமர்த்து
தமையன் செய்வது அனைத்தும் செய்யும் சுட்டிக் குறும்பு
பூங்காவில் வித்தைகள் செய்வாள்
பாங்குடன் வேண்டியவை பெறுவாள்
திங்கள் செல்வது அறியா வண்ணம் இன்புறுவாள்
எங்கள் குலமகள் உரிமையுடன் விளையாட அழைப்பாள்
கால் வைத்த இடமெல்லாம் குதூகலம் பொங்கிடும்
பால் பற்கள் மின்னிடவே சிரிப்பொலி முழங்கிடும்
அனைவரையும் அன்பாலே ஈர்த்திட்டாய் மருமகளே
ஆனந்தமாய் வாழ்ந்திடு என்றென்றும் திருமகளே
No comments:
Post a Comment