பாடல் நான் பாெருள் நீ
நடனம் நீ நளினம் நான்
நிழற்படம் நான் நினைவுகள் நீ
நிறைகுடம் நீ நதிநீர் நான்
பயிர் நான் வேர் நீ
உயிர் நீ உணர்வு நான்
மாக்கோலம் நான் புள்ளிகள் நீ
மணக்கோலம் நீ மங்கலியம் நான்
ஓவியம் நான் ஒய்யாரம் நீ
காவியம் நீ கருப்பொருள் நான்
தவம் நான் வரம் நீ
தாரம் நீ ( - உன்) சாரம் நான்
___________
பொருள்:
நளினம் = grace
காவியம் = epic
கருப்பொருள் = theme
ஒய்யாரம் = அழகு
சாரம் = essence
மங்கலியம் = தாலி
முதல் வரி நான் மனைவியைப் பற்றிக் கவிதை எழுதுவதைக் குறிக்கிறது.
இரண்டாவது வரி இருவரும் சேர்ந்து ஆடிய நடனத்தைக் குறிக்கிறது.
மூன்றாவது வரி அவள் பரிசு தந்த நிழற்படங்களைக் குறிக்கிறது.
நான்காவது வரி "நிறைகுடம் ததும்பாது" என்ற பழமொழிக்கேற்ப அவள் ஒரு நிறைகுடம் - அதாவது அலட்டிக் கொள்ளாதவள் என்பதை குறிக்கிறது.
ஆறாவது வரி இருவரும் சேர்ந்து பொங்கல் பானையில் மாக்கோலமிட்டதைக் குறிக்கிறது.
ஒன்பதாவது வரை நான் வரைந்த குடும்ப ஓவியத்தைக் குறிக்கிறது.
பதினோராவது வரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment