வெண்மதி போன்றது அவள் அகம்
வெகுமதிக்குத் தகுந்தது அவள் முகம்
நிம்மதி தரும் (அவள்) நினைவுகள் சுகம்
திருமதி அவள் என்னில் ஒரு பாகம்
இன்னல்கள் தீர்த்து உறுதியுடன் நிற்கும் நெஞ்சுரம்
இன்பங்கள் சேர்த்து வாழ்வை ஆக்கினாள் பாசுரம்
மகிழ்ச்சியுடன் பற்றுவேன் தினமும் அவள் கரம்
மனைவி அவள் இறைவன் கொடுத்த வரம்