மலரை (திரு)மணம் கொண்டேன்!
மகிழ்விக்க மனம் கொண்டேன்!
மலரும் நினைவுகளில்
மனமும் நிறையக் கண்டேன்!
மென்மேலும் மகிழ்வோம்!
மலரை (திரு)மணம் கொண்டேன்!
மகிழ்விக்க மனம் கொண்டேன்!
மலரும் நினைவுகளில்
மனமும் நிறையக் கண்டேன்!
மென்மேலும் மகிழ்வோம்!
சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பதைப் போல்
நீ எனக்குள் இருந்து சிறப்புக்களை வெளிக்கொணர்வது அழகு!
மென்மேலும் சிறந்து வாழ்வோம்!
பேரன்புடன்,
முத்து
பாடல் நான் பாெருள் நீ
நடனம் நீ நளினம் நான்
நிழற்படம் நான் நினைவுகள் நீ
நிறைகுடம் நீ நதிநீர் நான்
பயிர் நான் வேர் நீ
உயிர் நீ உணர்வு நான்
மாக்கோலம் நான் புள்ளிகள் நீ
மணக்கோலம் நீ மங்கலியம் நான்
ஓவியம் நான் ஒய்யாரம் நீ
காவியம் நீ கருப்பொருள் நான்
தவம் நான் வரம் நீ
தாரம் நீ ( - உன்) சாரம் நான்
___________
பொருள்:
நளினம் = grace
காவியம் = epic
கருப்பொருள் = theme
ஒய்யாரம் = அழகு
சாரம் = essence
மங்கலியம் = தாலி
முதல் வரி நான் மனைவியைப் பற்றிக் கவிதை எழுதுவதைக் குறிக்கிறது.
இரண்டாவது வரி இருவரும் சேர்ந்து ஆடிய நடனத்தைக் குறிக்கிறது.
மூன்றாவது வரி அவள் பரிசு தந்த நிழற்படங்களைக் குறிக்கிறது.
நான்காவது வரி "நிறைகுடம் ததும்பாது" என்ற பழமொழிக்கேற்ப அவள் ஒரு நிறைகுடம் - அதாவது அலட்டிக் கொள்ளாதவள் என்பதை குறிக்கிறது.
ஆறாவது வரி இருவரும் சேர்ந்து பொங்கல் பானையில் மாக்கோலமிட்டதைக் குறிக்கிறது.
ஒன்பதாவது வரை நான் வரைந்த குடும்ப ஓவியத்தைக் குறிக்கிறது.
பதினோராவது வரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியைக் குறிக்கிறது.
ஓடிச் சென்று வாயிலைத் திறந்து விளையாடிக் களித்து நம்மையும் மகிழ்வித்து
தேடிப் பல புதிர்களுக்கு விடை கண்டு
நாடி பல சொற்களைச் செவ்வனே கற்று
"சிக்கி புவா வேண்டும்" என்று
செல்லமாக இறைவனிடம் வேண்டி நின்று
செம்மையாக தமிழ் மொழியைப் பயின்று
இன்று போல் என்றும் உவந்திடுவாய் நன்று!
இரண்டாம் அகவையைப் பூர்த்தி செய்த நித்திலுக்கு
இறையருள் பரிபூரணமாகக் கிடைக்க வாழ்த்துகிறோம்!
பாெருள்:
வாயில் = கதவு
செவ்வனே = செம்மையாக = மிகச் சிறப்பாக
உவந்திடுவாய் = மகிழ்ந்திடுவாய்
அகவை = வயது
குறும்புக் குழந்தை குமரனின்
குதூகலமான முதல் பிறந்தநாளிது
வாழ்க்கை என்னும் பேருந்தின்
வாகான முதல் நிறுத்தமிது
தங்கமான மனம் கொண்டவர்கள்
தங்கள் நல்லாசிகளை நல்கிடுங்கள்
பொருள் :
வாகு = அழகு
நல்குதல் = அளித்தல்