தனயன் மேல் கொண்ட தாய்ப் பாசம் அழகு!
தாய் தந்தை மேல் கொண்ட தீரா நேசம் அழகு!
தம்பி மேல் கொண்ட பெரும் பரிவு அழகு!
துணைவன் மேல் கொண்ட பேரன்பு அழகு!
புகுந்த வீட்டாரின் மனத்தில் புகுவது அழகு!
தகுந்த சொல்லால் மகனுக்குப் புகல்வது அழகு
மிகுந்த பாங்குடன் வருநர்க்கு படைப்பது அழகு
உகந்த பொருளால் பகவனுக்குப் படைப்பது அழகு
பணியிடத்தில் மக்களைக் கையாளுதல் அழகு
துணிவுடன் முடிவுகள் எடுத்தல் அழகு
பண்புடன் அகலகத்தாருடன் பழகுதல் அழகு
கனிவுடன் எப்போதும் இருப்பவள் என் அழகு
அருஞ்சொற்பொருள்
தனயன் = மகன்
பரிவு = அன்பு
புகல்தல் = கற்பித்தல், teach
வருநர் = விருந்தாளி
படைப்பது = பரிமாறுவது & நைவேத்தியம் செய்வது
அகலகத்தார் = அண்டை வீட்டார், neighbor